திருநின்றவூர் மேம்பாலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் - பக்கத்து வீட்டு பெண் பலி
திருநின்றவூர் மேம்பாலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் - பக்கத்து வீட்டு பெண் பலிதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் மேம்பாலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் பக்கத்து வீட்டு பெண் பலியானார்கள். சிறுவன், சிறுமி உயிர் தப்பினார்
திருநின்றவூர் மேட்டுக் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் ( வயது 40 ) இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். திருநின்றவூர் சி.டி.எச்.சாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட தயார் ஆனார்.
அப்போது, இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மஞ்சுளா ( வயது 55 ) ஹரிஸ் ( வயது 12 ) அஸ்விகா ( வயது 3 ) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் புறப்பட்டார்.
அப்போது திருநின்றவூர் ரயில்வே மேம்பாலத்தில் எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கொத்தனார் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மஞ்சுளா தூக்கி வீசப்பட்டு மேம்பாலம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மஞ்சுளா இறந்து போனதாக கூறினார்கள். சிறுவன், சிறுமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்துப் பற்றி தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கொத்தனார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்துப் பற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

No comments
Thank you for your comments