ரூ.28 லட்சம் மதிப்பில் 35 அடி நீளத்தில் பட்டுத் திரைச்சீலை - காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நெசவாளர்கள் சாதனை
காஞ்சிபுரம், ஜன.23:
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி தரமான பட்டுச் சேலைகளை நெசவாளர்கள் தயாரித்து வருகின்றனர். இப்பட்டுப்பூங்காவில் உள்ள 5 நெசவாளர்கள் ஒருங்கிணைந்து 35 அடி நீளத்தில் பட்டுத்திரைச்சீலை ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து வடிவமைப்பாளர் எஸ்.குமாரவேல் கூறியதாவது:
சாதாரணமாக கைத்தறியில் ஒரு பட்டுச்சேலை நெய்து முடிக்க குறைந்த பட்சம் 15 நாட்களாவது ஆகும். தற்போது பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆலோசனை மற்றும் அறிவுரையின்படி 24 அடி அகலம், 35 அடி நீளத்தில் கடந்த 45 நாட்களாக பட்டுத்துணியில் ஒரு திரைச்சீலையை தயாரித்து வருகிறோம்.
இச்சேலையை கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நெய்யத் தொடங்கி இன்னும் ஒரு சில தினங்களில் இத்திரைச்சீலை நெய்யும் பணி நிறைவு பெறவுள்ளது.
பல வண்ணங்களில் வடநாட்டில் உள்ள ஒரு கோயில் ஒன்றின் ராஜகோபுரம் ஒரே படமாக 35 அடி நீளச் சேலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.
இத்திரைச் சீலையை செய்ய இதுவரை ரூ.28லட்சம் வரை செலவாகி இருக்கிறது.மூத்த நெசவாளர் எஸ்.லவக்குமார், கைத்தறி தொழில் நுட்பக் கலைஞர்கள் எஸ்.சீனிவாசன், பி.கங்காதரன் உள்ளிட்ட 5 பேர் ஒருங்கிணைந்து இச்சேலையை வடிவமைத்துள்ளனர்.
இத்திரைச்சீலைக்கென்றே நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தயாராகி வருகிறது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இத்திரைச் சீலை பெரும் வணிக வளாகங்கள், கண்காட்சிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் பார்த்து வியக்கும்படி தயாரித்து வருவதாகவும் எஸ்.குமாரவேல் தெரிவித்தார்.


.jpg)
No comments
Thank you for your comments