Breaking News

கீவளூர் ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் நிதி முறை கேடு. - ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கீவளூர் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி தொழிற்சாலை மிகுந்த பகுதியாக உள்ளது. 


இங்கு உள்ள தனியார் ஆலைகளில் பணிபுரிய அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கி பணிபுரிகின்றனர். இதனால் இந்த ஊராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 

பொதுமக்களின் வசதிக்கேற்ப குடிநீர் வினியோகம் செய்வதற்கு குழாய் பதித்தது, கால்வாய், சாலை, தெரு மின்விளக்கு ப்ளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்தது என பல்வேறு பணிகளில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். 

இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து மனு அளித்து நடவைக்கை இல்லை.  இதனால் ஊராட்சியில் நடந்துள்ள நீதி முறைகேடுகளை அதிகாரிகள் தணிக்கை செய்து அதனை அறிக்கையாக தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு வழங்கி உள்ளனர்.

No comments

Thank you for your comments