Breaking News

காஞ்சிபுரத்தில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு

காஞ்சிபுரம், ஜன.31:

காஞ்சிபுரம் மாவட்ட காவலர் பயிற்சி மைதானத்தில் ஊர்க்காவல்படையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம் : ஊர்க்காவல்படைக்கு ஆட்களை தேர்வு செய்த காவல்துறையினர்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி.கே.சண்முகம் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு மாவட்ட காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் அலுவலக தலைமையிட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமை வகித்தார். 

ஆயுதப்படைப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்குமார், ஊர்க்காவல்படை கமாண்டர் ஜே.மேரிஸ்டெல்லா, துணை கமாண்டர் கோ.சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

மாவட்டத்தில் 34 காலிப்பணியிடங்களுக்கு 300 பேர் கலந்து கொண்டனர். ஆட்கள் தேர்வின் போது மார்பளவு, உயரம்,கல்விச்சான்றிதழ் ஆகியன சரிபார்க்கப்பட்டது.


No comments

Thank you for your comments