உத்தரமேரூரில் 2249 பயனாளிகளுக்கு ரூ.18.91 கோடி மதிப்பில் வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
காஞ்சிபுரம் :
படவிளக்கம்: விழாவில் பயனாளிக்கு வீட்டு மனைப்பட்டாவை வழங்குகிறார் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.
மக்களவை உறுப்பினர் க.செல்வம்,எம்எல்ஏ க.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் ஒன்றியக்குழுவின் தலைவர் ஹேமலதா ஞானசேகர் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 2249 பயனாளிகளுக்கு ரூ.18,91,76,382 மதிப்பிலான வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-
பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களில் சில கிராமக் கணக்குகளில் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளதை உரிய திருத்தங்கள் செய்து பட்டா வழங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு புறம் போக்கு நிலங்களில் குடியிருந்த 5288 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிட கோப்புகள் கண்டெடுக்கப்பட்டு அதனடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் முதற்கட்டமாக கடந்த 28.11.23 ஆம் தேதி 3008 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2249 பயனாளிகளுக்கு ரூ.18,91,76,382 மதிப்பிலான வீட்டு மனைப் பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஒன்றியக்குழுவின் தலைவர்கள் மலர்க்கொடி குமார்,ஆர்.கே. தேவேந்திரன், உத்தரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொ.சசிக்குமார் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)
No comments
Thank you for your comments