Breaking News

புத்தாண்டு,மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் - காஞ்சிபுரம் எஸ்பி எச்சரிக்கை

காஞ்சிபுரம்  :

ஆங்கிலப்புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.எம்.சுதாகர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியது, 

ஆங்கிலப்புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகள் 36க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸôர் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை புத்தாண்டு தினம் வரை கோயில்கள், தேவாலயங்கள்,மசூதிகள் உட்பட மொத்தம் 160 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸôர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளவுள்ளனர்.

3 ஏடிஎஸ்பிக்கள்,4 டிஎஸ்பிக்கள், 15 ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள், ஊர்க்காவல்படையினர் உட்பட மொத்தம் 800 பேர் பாதுகாப்பு பணியினை செய்யவுள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள்,கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிக்கவோ,சாலை ஓரங்களில் நின்று கொண்டு மது அருந்தவோ கூடாது.முக்கியமாக மது போதையில் வாகனங்களை ஓட்டினால் சம்பந்தப்பட்டவரின் வாகனங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பெண்களை கேலி,கிண்டல் செய்யக்கூடாது. அசம்பாவிதங்கள், இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் 9498100260 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 044 27236111 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம்.

பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும்,பாதுகாப்பாகவும் கொண்டாட காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் எஸ்பி எம்.சுதாகர் கேட்டுக்கொண்டார்.


No comments

Thank you for your comments