காஞ்சிபுரம் அருகே அகத்தியர் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தில் அறம் வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சப்தரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர் தனது மனைவி உலோப முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.
மார்கழி மாத ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்தியர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி ஆலயத்தில் அகத்தியருக்கும் அவரது மனைவி உலோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
அகத்தியரின் 108 திருநாமங்கள் போற்றி வழிபாடும் செய்யப்பட்டது. கிளார் கிராமத்து பொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவியர் பலரும் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படவிளக்கம் : அவதார தினத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மனைவி உலோப முத்திரையுடன் அகத்தியர்

No comments
Thank you for your comments