Breaking News

மருத்துவன்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்,ரூ.1.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், ஜன.24:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மருத்துவன்பாடி கிராமத்தில் 109 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மருத்துவன்பாடி கிராமத்தில் கடந்த 2.1.24 ஆம் தேதி முதல் 22.1.24 ஆம் தேதி வரை குறை கேட்பு முகாம் நடத்தப்பட்டது.இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 82 மனுக்கள் பெறப்பட்டது.இம்மனுக்களின் மூலம் மொத்தம் 109 தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் ரூ.1.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

வருவாய்த்துறை மூலம் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்,கூட்டுறவுத்துறை மூலம் கால்நடை பராமரிப்புக் கடன் 15 நபர்களுக்கு வழங்கியது உட்பட மொத்தம் 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

முகாமிற்கு உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உத்தரமேரூர் ஒன்றியத்தின் தலைவர் ஹேமலதா ஞானசேகர் வரவேற்று பேசினார்.முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் சி.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்}மருத்துவன்பாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

No comments

Thank you for your comments