Breaking News

காஞ்சிபுரம் கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம், ஜன.29:

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் தேசிய சாலைப்பாதுகாப்பு விழாவையொட்டி திங்கள்கிழமை சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் உள்ள கிருஷ்ண கல்லூரியில் 35 வது தேசிய சாலைப்பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞர் நல அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் காஞ்சனா வரவேற்று பேசினார்.விழாவில் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஒலி,ஒளிக் காட்சி மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு குறித்து விளக்கிக் கூறினார்.மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

விழாவில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்,நேருயுவகேந்திரா அமைப்பின் இளைஞர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 716 பேர் கலந்து கொண்டனர்.நிறைவாக அனைவரும் ஒன்றாக இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேபி நன்றி கூறினார்.

படவிளக்கம் : ஒலி-ஒளிக் காட்சி முலம் கல்லூரி மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம்

No comments

Thank you for your comments