Breaking News

ஜன.25-ம் தேதி திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம்,ஜன.19-

காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர் கோயிலில் இம்மாதம் 25 ஆம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர் கோயில்.ராமேசுவரம் சென்று ராமநாதசுவாமியை தரிசிக்க முடியாதவர்கள் இக்கோயிலில் உள்ள மூலவரை தரிசித்தால் ராமநாதசுவாமியை தரிசனம் செய்த புண்ணியம் கிடைப்பதாக ஐதீகம். 

இக்கோயில் வடக்கு ராமேசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது.விஜயநகர பேரரசு ஆட்சிக்காலத்தில் மன்னராக இருந்த பிச்சநாயக்கன் என்ற அரசரால் இக்குளம் உருவாக்கப்பட்டதால் பிச்சநாயக்கன் குளம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருக்கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி வரும் 25 ஆம் தேதி திம்மராஜம்பேட்டை அருகில் உள்ள தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பிச்சநாயக்கன் குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. தெப்பத் திருவிழாவையொட்டி பிச்சநாயக்கன் குளத்தில் அல்லி மலர்கள் மற்றும் தாமரை மலர்கள் கோயில் பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாவையொட்டி திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும்,மாலையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

இதனையடுத்து பிச்சநாயக்கன் குளத்துக்கு சுவாமி எழுந்தருளி தெப்பத்தில் 3 முறை வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம்,திம்மராஜம்பேட்டை மற்றும் தாங்கி கிராம பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

படவிளக்கம் : தெப்பத்திருவிழாவையொட்டி பிச்சநாயக்கன் குளத்தில் கோயில் பணியாளர்களால் சுத்தம் செய்யப்படும் அல்லி மலர்கள் மற்றும் தாமரை இலைகள்

No comments

Thank you for your comments