16-வது நிதிக்குழுவிற்கான பணியிடங்களை உருவாக்குதல் உட்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, ஜன.19-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் 280-வது பிரிவின் கீழ், 2023 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 16-வது நிதிக்குழுவிற்கு இணைச் செயலாளர் நிலையில் மூன்று பணியிடங்களை அதாவது, இரண்டு இணைச் செயலாளர் பணியிடம், ஒரு பொருளாதார ஆலோசகர் பணியிடம் ஆகியவற்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒப்புதல்
புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் நிதிக்குழுவின் பணிகளை மேற்கொள்ள உதவி புரிய வேண்டும்.
குழுவின் மற்ற அனைத்துப் பணியிடங்களும் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, நெதர்லாந்து சுகாதார நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இடையே மருந்துகள் மதிப்பீட்டு வாரியம், சுகாதாரம் மற்றும் இளைஞர் நல கண்காணிப்பகம், மனித ஆராய்ச்சி தொடர்புடைய மத்திய குழு சார்பில் "மருந்து தயாரிப்புகள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்காக 2023 நவம்பர் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா-டொமினிகன் ஒப்பந்தம்
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பொது சுகாதாரம் அமைச்சகத்தின் மருத்துவம், உணவுகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அமைப்புகளுக்கான தலைமை இயக்குனரகம் ஆகியவற்றுக்கும், டொமினிகன் குடியரசின் சுகாதார அமைச்சகத்தின் உணவு மற்றும் தூய்மைப் பொருட்கள் அமைப்பிற்கும் இடையே மேற்கொளள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 அக்டோபர் 4 அன்று கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவப் பொருட்கள் தொடர்பான துறைகளில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் அதிகார வரம்பிற்குள் தொடர்புடைய நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்ககளிலும் இது ஒத்துழைப்பை மேம்படுத்தும். சர்வதேச சந்தைகளில் தரமற்ற, போலியான மருந்துகளின் புழக்கத்தை தடுப்பதில் இணைந்து செயல்படுவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
டிஜிட்டல் தீர்வு
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், கென்யா அரசுக்கும் இடையே 2023 டிசம்பர் 5 -ந் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இரு நாடுகளிலும் டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பு, அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருதரப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வருவதுடன், 3 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும்.
இந்தியா- ஈக்வடார்
No comments
Thank you for your comments