Breaking News

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி- உத்திரமேரூர் போலீசார் சடலத்தை கைபற்றி விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சதக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த வரதன் என்பவரது மகன் துரைராஜ் வயது 28, இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 


துரைராஜ் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியா தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றபோது அம்மையப்பநல்லூர் என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் போது சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். 

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீசார் துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments