Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், ஜன.24:

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தோப்புத் தெருவில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தோப்புத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 20 ஆம் தேதி சனிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது.

21 ஆம் தேதி கோ.பூஜை, தனபூஜையும்,  22 ஆம் தேதி லட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும்,பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது. மூலவருக்கான அபிஷேகத்தை கோயில் அர்ச்சகர் காளத்தி குருக்கள் நடத்தினார்.

கும்பாபிஷேக நிகழ்வை காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் ஓதுவார் த.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். விழாவில் மணிப்பூர் ஐ.ஜி என்.ஞானசம்பந்தன்,காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் ஆர்.வனிதா,காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவின் இயக்குநர் வி.சந்தானகிருஷ்ணன், மகப்பேறு மருத்துவர் இன்பவள்ளி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஏகேஜி ஜெயபாலன், ஆர்கேவி கதிர்வேலு ஆகியோர் தலைமையில் விளக்கடி கோயில் தோப்புத் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.

படவிளக்கம்: காஞ்சிபுரம் செல்வ விநாயகர் கோயில் மூலவர் கோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் செய்த குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள்

No comments

Thank you for your comments