காஞ்சிபுரத்தில் 10 விவசாயிகளுக்கு ரூ.3.90லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜன.23-
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்க காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண்மை இணை இயக்குநர் பிரின்ஸ் கிளமென்ட் வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3.79லட்சம் மதிப்பிலான பயிர்க்கடன்கள் உட்பட மொத்தம் 10 விவசாயிகளுக்கு ரூ.3.90ல ட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் அரசு அலுவலர்கள்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்,விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கை மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காணுமாறும் ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
.jpg)

No comments
Thank you for your comments