மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ 1 கோடி மோசடிக்கு உடந்தையானவர் கைது
மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி மோசடிக்கு உடந்தையானவர் கைது செய்யப்பட்டார்.முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகு, கோபிநாத், கண்ணன், மணிகண்டன், ஜெரால்டு ஆகியோர் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் புகார் ஒன்று கொடுத்தனர்.
அப்புகாரில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆவடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரூ 1 கோடி பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை.பணத்தை திருப்பிக் கேட்டப் போது பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர்.
இப்புகார் காவல் ஆணையர் கி.சங்கர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அப்போது முக்கிய குற்றவாளி கார்த்திகேயன் தலைமறைவாகிவிட்டார் என தெரிய வந்தது.
ஆனால் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அருள் ஜோதி ( வயது 45 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

No comments
Thank you for your comments