Breaking News

மகளை நினைத்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்



மகளின் மறைவைத் தான் இன்னும் நம்பவில்லை எனவும், அதிகம் வலிக்கிறது எனவும் விஜய் ஆண்டனியின் மனைவி மீரா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இது பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.

தமிழில் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் மாதம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதான பள்ளி மாணவியான மீராவின் இந்த திடீர் முடிவு அனைவரையும் கலங்கடிக்க செய்தது. 

பள்ளியில் நன்றாக படித்து வந்தவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் செய்திகள் பரவியது. மீரா மறைவு தந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீளாத விஜய் ஆண்டனி, மீரா பெயரில் இனி நல்ல காரியங்கள் செய்யப் போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அவருடைய புகைப்படம் பகிர்ந்து எமோஷனலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது, 

' மீரா தங்கம் உன்னுடைய பியானோ, நீ வாசிக்கக் காத்திருக்கிறது. எங்களை விட்டு சீக்கிரமாய் போய்விட்டாய். இந்த உலகம் உனக்கானதாக இல்லை போல! ஆனால், அம்மா இன்னும் இங்கேதான் இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையேயான கான்செப்டை புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உன்னிடம் வரும் வரை நன்றாக சாப்பிடு, தூங்கு. உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன். ரொம்ப வலிக்குது. கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும்' என உருக்கமாகக் கூறியுள்ளார். 

ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.


No comments

Thank you for your comments