Breaking News

ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிவ லிங்கம் ரூபத்தில் சங்குகளை கொண்டும் ஓம் வடிவிலும் தீபம் ஏற்றி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாகத்தில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு பூர்னஹதியானது நடைபெற்றது 

பின்னர் 1008 சங்குகளை கொண்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது மேலும் நடராஜர் மண்டபத்தில் ஸ்ரீ சிவலிங்க ரூபத்தில் சங்குகளால் வடிவமைக்கப்பட்டும் லிங்க வடிவிலும் மகாதீபங்களை ஏற்றினார்கள் 

இதே போன்று அகிலாண்டீஸ்வரி அம்மன் சன்னதியிலும் ஓம் வடிவில் மகாதீபங்களை ஏற்றி திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர் பின்னர் 1008 சங்குகளை கொண்டு ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

No comments

Thank you for your comments