Breaking News

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எம் எல் ஏ சுந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வி எஸ் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில்  எம் எல் ஏ சுந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 



காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் உட்புறத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பாக கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில கழக வர்த்தக அணி துணை செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் காஞ்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி வலைத்தள பொறுப்பாளரும் காஞ்சிபுரம் மாநகராட்சி 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  ஆர் மல்லிகா ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் 




பொதுமக்களுக்கு அயன் பாக்ஸ், டைலரிங் மிஷின் , பெட்ஷீட், போர்வை , 10 கிலோ அரிசி மூட்டை மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல்  க செல்வம் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான  க சுந்தர் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், 1வது பகுதி கழக செயலாளர் திலகர், 2வது பகுதி செயலாளர் சந்துரு , தலைமை செயற்குழு உறுப்பினர் சிகாமணி, பகுதி கழக துணை செயலாளர்கள் பி எஸ் குடியரசு , வினோத் குமார்,  தனலட்சுமி , அய்யலக அணி மாவட்ட தலைவர் 

பி.எம்.நீலகண்டன் , மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி , விஜயா , மாநகராட்சி வழக்கறிஞர் அரவிந்த் குமார், காஞ்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி துணைத் தலைவர் இ ஜாபர் , 18 ஆவது வார்டு வட்ட செயலாளர் கே சம்பத், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் , நெசவாளர் அணி அமைப்பாளர் மலர்மன்னன் , முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குமணன், பகுதி அமைத்தலைவர் குமரேசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜிம் மாஸ்டர் ஜெய்கணேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் திம்மயம்பேட்டை 

டி பிரபாகரன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் மு.முரளி , தொண்டரணி துணை அமைப்பாளர் பஸ் ஸ்டாண்ட் மணிகண்டன் , பகுதி கழக துணை செயலாளர் விமல்தாஸ், சாட்சி சண்முகம் , 6வது வட்டக் கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .

No comments

Thank you for your comments