Breaking News

இன்றைய (13-12-2023) ராசி பலன்கள்


மேஷம்

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். உற்சாகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அஸ்வினி : விட்டுக்கொடுத்து செல்லவும். 

பரணி : எண்ணங்கள் மேம்படும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.



ரிஷபம்

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். வியாபார வரவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில அனுபவம் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : தாமதம் ஏற்படும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.


மிதுனம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மனை தொடர்பான தடை, தாமதங்கள் குறையும். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வேலையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.

திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.


 

கடகம்

தொழிலில் இருந்துவந்த தேக்க நிலை குறையும். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஓய்வு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் :  சாதகமான நாள்.

பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ஆயில்யம் : ஆதரவான நாள்.


சிம்மம்

நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். கலை சார்ந்த அறிவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நேர்மறை சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். மனதளவில் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகம் : லாபம் அதிகரிக்கும்.

பூரம் : நம்பிக்கை மேம்படும்.

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.



கன்னி

பெரியோர்களின் ஆலோசனைகள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடல் நிலையில் மந்தநிலை ஏற்படும். பயணம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். நட்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

அஸ்தம் : அமைதியின்மையான நாள்.

சித்திரை : வேறுபாடுகள் குறையும்.



துலாம்

சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நவீன பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிரமம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

விசாகம் : துரிதம் ஏற்படும்.


விருச்சிகம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அனுஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.



தனுசு

அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் அலைச்சல் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் உண்டாகும். வருத்தம் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.



மகரம்

பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் 

உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.

திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

அவிட்டம் : ஈடுபாடுகள் உண்டாகும்.



கும்பம்

நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரச்சனைகளுக்கு தெளிவான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சதயம் : இன்னல்கள் குறையும்.

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.



மீனம்


வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மனைகளால் லாபம் உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் போது சிந்தித்து செயல்படவும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

உத்திரட்டாதி :  அனுகூலமான நாள்.

ரேவதி : சிந்தித்து செயல்படவும்.


No comments

Thank you for your comments