Breaking News

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், டிச.12:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மிக்ஜம் புயல் மற்றும் பெருமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. அரசு சார்பில் முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், மழை மற்றும் புயல் காரணமாக கடந்த 10 நாட்களாக வேலையில்லாமல் இருந்து வரும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் கே.செல்வம் தலைமை வகித்தார்.

விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.நேரு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என்.சாரங்கன்,எஸ்.சீனிவாசன் உட்பட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

No comments

Thank you for your comments