பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்
- பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலம் எடுப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
- பாதிக்கப்படும் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேறறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதன் மூலம் 3774.01 ஏக்கர் பட்டா நிலமும் 1972.12 ஏக்கர் அரசு நிலமும்,1005 வீடுகள் 13 ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள், சுடுகாடு, ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் தொடர்ந்து 513 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசாணை எண் 210-த்தை வெளியிட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டு உள்ள நிலம் எடுப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் நடைபெற்றது.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஏகனாபுரம், நெல்வாய், பரந்தூர், நாகப்பட்டு, தண்டலம், கூத்திரம் பாக்கம்.மேலே ஏறி,தொடூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய,மாநில, அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெருந்திரள ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை ஓட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் பேசுகையில்;
தமிழ்நாடு அரசு பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அரசாணை சமீபத்தில் வெளியிட்டது. அதனை முற்றிலமாக திரும்பப் பெற வேண்டும். மேலும் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் புயல், மழை சீற்றத்தால் விமான நிலையங்கள் வெள்ளாத்தல் முடங்கியதை கருத்தில் கொள்ள வேண்டுமென கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் என் சாரங்கன் தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா சரவணன், மாவட்ட செயலாளர் கே.நேரு(தவிச), விவசாயிகள் ஜி.சுப்பிரமணியன் (ஏகாம்பரம்), டி.குணசேகரன் (நெல்வாய்), கே.முருகன், இ.சங்கர், டி ஸ்ரீதர்,முருகன், அரிகிருஷ்ணன், மகாதேவி, மற்றும் எஸ்.ஆனந்த், என்.நந்தகோபால் உள்ளிட்டோர் பேசினர்.
No comments
Thank you for your comments