அரசு மருத்துவமனைக்கு ரூ.58லட்சம் மதிப்பிôலன உபகரணங்கள் வழங்கல்
காஞ்சிபுரம், டிச.19:
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துரை இணை இயக்குநர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளிடம் ரூ.58லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கோனே எலிவேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கோனே எலிவேட்டர்ஸ் மற்றும் எஸ்கலேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கான அதி நவீன உபகரணங்கள் ,ரத்ததான சாய்வு நாற்காலி உள்ளிட்ட ரூ.58லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநர் ஜி.சி.கோபிநாத் தலைமை வகித்து கோனே எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் செல்லப்பா பத்ரிநாத்,மக்கள் தொடர்பு அலுவலர் எம்.பி.சரவணன் ஆகியோரிடமிருந்து மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்விற்கு அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன்,யுனைடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மீனாட்சி ரமேஷ், மூத்த மருத்துவர் கிருஷ்ணகுமாரி, நிர்வாக அலுவலர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவர் கவிதா ராணி வரவேற்று பேசினார்.
மூத்த செவிலியர் இந்திரா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை யுனைடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படவிளக்கம் : சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் ஜி.சி.கோபிநாத் உள்ளிட்ட மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய கோனே எலிவேட்டர்ஸ் நிறுவன அதிகாரிகள்
No comments
Thank you for your comments