Breaking News

காஞ்சிபுரத்தில் மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்

காஞ்சிபுரம், டிச.16:

இந்திய மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் சனிக்கிழமை மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் 5 நட்சத்திர விடுதியில் இந்திய மருத்துவச்சங்கமும்,ஜி.எஸ்.கே.மருந்து நிறுவனமும் இணைந்து மருத்துவர்களுக்கான கருத்தரங்கை நடத்தினார்கள்.சங்கத்தின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.சங்க செயலாளர் சு.தன்யக்குமார்,இணைச் செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் ஆ.விவேகானந்தன் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஏற்படும் தடைகள் என்ற தலைப்பில் பேசினார்.

பாரத ஸ்டேட் வங்கி காஞ்சிபுரம் கிளையின் தலைமை மேலாளர் ஜெ.செந்தில்நாதன் மருத்துவர்களுக்காக ஸ்டேட் வங்கியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரிவாக விளக்கி கூறியதுடன் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் மருத்துவர்களுக்கு வழங்கினார்.நிகழ்வில் இந்திய மருத்துவச்சங்க கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்} ஸ்டேட் வங்கியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கையேட்டுத் தொகுப்பினை மருத்துவர்களுக்கு வழங்கும் ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் ஜெ.செந்தில்நாதன்

No comments

Thank you for your comments