Breaking News

சுங்குவார்சத்திரத்தில் 360 கைப்பேசிகள் திருட்டு - ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது

காஞ்சிபுரம், டிச.16:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் கைபேசி விற்பனையகத்தின் பூட்டை உடைத்து 361 கைப்பேசிகளை திருடிய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் கிராமம் காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(32)இவர் சுங்குவார் சத்திரம் பஜாரின் கைபேசிகள் விற்பனையகத்தை நடத்தி வந்தார்.இவரது பூட்டியிருந்த கடையின் கதவை உடைத்து அதிலிருந்த 361 கைபேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

கடந்த 17.7.2023 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக அப்துல் ரகுமான் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தார். அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் கைப்பேசிகளை திருடி சென்றவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஹீமீத் உசைன்(35)இர்பான்(28)ஜாபித் (25)அலிஜான்(50)உள்ளிட்ட நாலு பேர் என்பதும் தெரிய வந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சுங்குவார்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்ததுடன் அவர்களுக்கு தலா ரூ.10ஆயிரமும்,நால்வருக்கும் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.


No comments

Thank you for your comments