Breaking News

கோவை ஸ்மார்ட் சிட்டியை பார்வையிட பல்வேறு நகரங்களிலிருந்து உயர் அதிகாரிகள் வந்தனர்.


கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என  பல்வேறு நகரங்களிலிருந்து  துணை கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவை வந்தனர்.  

கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடந்தது. கருத்தரங்கிற்கு  மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். 

இந்த கருத்தரங்கில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 7 குளங்களில் நடைபெற்ற வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.  

கருத்தரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் குணால் குமார் பேசும்போது : 

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்றால் ஷாங்காய், நியூயார்க் போன்ற நகரங்களாக மாற்ற உள்ளதாக எண்ணுகின்றனர். ஆனால், சமூகம் பல ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அந்த நிலைமைக்கு மாற்றுவதே இந்த திட்டம். 

நகரங்களில் பொது இடங்களில் இடைவெளி என்பது அவசியமானது. கொரோனா காலத்தில் நகரங்கள் காலியாகி கிராமப்புறங்களுக்கு படையெடுத்தது.

மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்வதற்கு, நேரத்தை செலவிடுவதற்கு நகரங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் 

இதுபோன்ற கருத்தரங்கம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக அறிந்துகொண்டு அவரவர் பகுதிகளில் செயல்படுத்தவும், அதேபோல் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மற்ற நகரங்களை சேர்ந்தவர்கள் மூலம் அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ள என பல வகைகளில் உதவுகிறது.

உட்கட்டமைப்பு வசதிகளில் மேற்கொள்ளப்படும் பொது இடங்களை உருவாக்குவது என்பது பொதுமக்களை ஈடுபடுத்தும் வகையிலும் பயன்பெறும் வகையிலும் ஏற்படுத்த வேண்டும். இவர் அவர் பேசினார்.

தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரிய குளத்தில் அந்தரத்தில் சைக்கிள் பயணம், விளையாட்டு பூங்காக்கள், 3 டி திரையரங்கம் மற்றும்  லைட்டிங் ஷோ உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

இதனை தொடர்ந்து உக்கடம் பெரியகுளம், ஐலவ் கோவை செல்பி பாயிண்ட், ரேஸ்கோர்ஸ்  மீடியா டவர் மற்றும் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டமைப்பு என ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்டு திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அக்குழுவினர் அறிந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments