காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சி - சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் திறந்து வைத்து பார்வையிட்டார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் 23 வது ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தலைவர் சி.கே.ராமன் தலைமை வகித்தார்.
தொழிலதிபர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.எஸ்எஸ்கேவி மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.
புத்தக கண்காட்சியை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழாவில் எஸ்எஸ்கேவி மெட்ரிக்குலேசன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஷாலினி, எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கெüரி ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், புத்தக விற்பனையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் 7 பதிப்பகங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
படவிளக்கம் : புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்
No comments
Thank you for your comments