பழங்குடியினர் குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தருதல் திட்டம் - முதல்வருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இன்றி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும், அடிப்படை வசதிகள் செய்திடவும், பொருளாதார வசதியை மேம்படுத்தும் பொருட்டு, திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், சந்தவேலூர் ஊராட்சியில் 22 பட்டியல் இனத்தவர்களுக்கு பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித் தருதல் திட்டம் 2022-23ன் கீழ் வீடு கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பழங்குடியின (ST) குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தருதல் திட்டம் 2022-2023ன் கீழ் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், சந்தவேலூர் ஊராட்சி, ஆண்டாள் நகரில் வசிக்கும் 22 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு ரூ.4,63,890/- மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி உத்தரவுக்கான ஆணையினையும் மற்றும் சாதி சான்றிதழ்யினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
வீடு கட்டுவதற்கான பணி உத்தரவுக்கான ஆணையினை பெற்று பயனடைந்த திருப்பெரும்புதூர் வட்டம், சந்தவேலூர் ஊராட்சி, ஆண்டாள் நகரை சார்ந்த திருமதி.க.ஜெயந்தி, க/பெ. கன்னியப்பன் அவர்கள் தெரிவித்ததாவது:
என் பெயர் க.ஜெயந்தி, க/பெ கன்னியப்பன், நான் திருப்பெரும்புதூர் வட்டம், சந்தவேலூர் ஊராட்சி, ஆண்டாள் நகரில் வசித்து வருகிறேன். என் கணவர் ஒரு கூலி தொழிலாளி. எங்கள் குடும்பம் மழை மற்றும் வெயில் காலங்களில் தங்குவதற்கு தகுதியான வீடுகள் இல்லாமல் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வந்தோம்.
இத்தகைய சூழலில் மாவட்ட நிர்வாகம் எங்களை அணுகி எங்களின் குறைகளை கேட்டறிந்து எங்களின் அடிப்படை தேவையான வீடு கட்டுவதற்கு பணி உத்தரவு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து வழங்கினார்கள்.
எங்களது நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகை செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு:
திரு.க.இராமச்சந்திர பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments