டிச.24 -ம் தேதி காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு
காஞ்சிபுரம் :
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :-
காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன.
இவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குரிய எழுத்து தேர்வு வரும் டிச.24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு நிறைவு பெறும். தேர்வுகள் காஞ்சிபுரம் அருகே திருமலை பொறியியல் கல்லூரி மற்றும் அதன் அருகேயுள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியின் தேர்வு மையத்திலும் நடைபெறவிருக்கிறது.
விண்ணப்பதாரர்கள் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான www.drbkpm.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய கைப்பேசி எண் 90430 46100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to download: Hall Ticket
இணையதள முகவரியான www.drbkpm.in
No comments
Thank you for your comments