Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேட்டு போக்கிரியான பிரபல ரவுடி குணா (எ) படப்பை குணா (எ) குணசேகரன்(44), த/பெ. நமச்சிவாயம் (C2 PS HS No.10/1999) என்பவர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் 4 கொலை வழக்குகளும், 



செங்கற்பட்டு தாலுக்கா காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும். பாலூா காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் மற்றும் மணிமஙகலம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் மொத்தம் 8 கொலை வழக்குகள் மற்றும் 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 56 வழக்குகள் உள்ளது. 

இவர் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகம் ஆகிய காவல் நிலையங்களிலும், அண்டை மாவட்ட காவல் நிலையங்களான மணிமங்கலம். சோமங்கலம் கூடுவாஞ்சேரி. பாலூர். செங்கற்பட்டு, மறைமலை நகர், புழல் மற்றும் திருவேற்காடு ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும். இவர் மீது இதுவரை 3 முறை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ரவுடி குணா 03.12.2023 அன்று வழிபறி செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சி2 சுங்குவார்சத்திரம் காவல் நிலைய குற்ற எண். 852/2023 u/s.294(b),341,323,392,397, 307,506(ii) இதசவில் வழக்கு பதிவு செய்து 04.12.2023 அன்று கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி கிளைச்சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.M.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மேற்படி மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்பு காவலில் (GOONDAS) வைக்க 15.12.2023 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Thank you for your comments