புயல், வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் முழுமையான திட்டம் வகுக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி பேட்டி
- புயல், வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் முழுமையான திட்டம் வகுக்கப்படும் அமைச்சர் முத்துசாமி காஞ்சிபுரத்தில் பேட்டி
- நடுவீரப்பட்டு ஏரி உடைப்புக்கு யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும்
- ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி பேட்டி
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையினால் பல பகுதிகளில் நீரால் சூழ்ந்தது.
இதனைத் தவிர்க்கவும், மீட்புப்பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், வெள்ள மீட்பு பணிகளுக்காக நான்கு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி ஒரு வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியிருந்து பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாட்டித்தோப்பு, முருகன் காலணி, திருக்காலிமேடு, ஒலிமுகமதுப்பேட்டை, செவிலிமேடு, ஒரிக்கை மற்றும், வாலாஜாபாத், உத்திரமேரூர், மானாம்பதி, வரதராஜபுரம், குன்றத்தூர், செம்பரம்பாக்கம் மற்றும் மாங்காடு உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளியில் தாழ்வான இடங்கள்,சேதமடைந்த வீடுகள், முகாம்கள், நிவாரண பணிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புயல் காரணமாக மிகப்பெரிய மழை பெய்ததால் சில இடங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்ததால் பெரும் பகுதி பாதுகாக்கப்பட்டது. சில பகுதிகள் பாதிக்கப்பட்டன ஆனால் முதலமைச்சர் புயல் அறிவிப்பு வந்தவுடன் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தொடர் நடவடிக்கைகள் மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பல பகுதிகள் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21- குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 62 முகாம்கள் அமைக்கப்பட்டன. முதலமைச்சரின் ஆலோசனைப்படி என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என
எம்.பி,எம்எல்ஏக்கள், மற்றும் ஆட்சியர், அதிகாரிகள் என பாதிப்புகள் தீர்க்கும் வகையில் ஒரு திட்டமாக வகுக்கப்பட்டு 4,5 மாவட்டங்களில் ஒன்றாக இனைத்து முழுமையான எந்த காலத்திலும் புயல் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் வகுக்கப்பட்டால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலை உருவாக்க முடியும்.
அதன் பிறகு நலத்திட்ட உதவிகள் அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் எம்பி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஆலோசனைப்படி சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மாங்காடு பகுதியில் முழுமையான பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கட்சிக்காரர்களும் நலத்திட்ட உதவிகளை விரைவாகும் வேகமாக வழங்கி வருகின்றனர்.தினம்தோறும் முதல்வர் நாங்கள் செய்யும் பணிகளை கண்காணித்து வருகிறார் .இதன் மூலம் ரூபாய் 6000 வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 300 கோடி திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப் பட்டு வருகிறது. இது முழுமை பெற்றால் இது போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படும் மேலும் சென்னைலும் 500 கோடி வேலை நடைபெற்ற வருகிறது இந்த பணிகள் முழுமை பெற்றால் 90% பிரச்சனைகள் தீர்க்கப்படப்படும்.
மேலும் வல்லுனர்களும் குழு அமைத்து ஆராய்ந்து வருகின்றனர். சென்னையில் பெரும்பகுதி பிரச்சினை முடிந்துவிடும் ஆனால் சிலர் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .2015 இல் கடுமையான சீற்றம் அல்ல. ஆனால் அதை ஒப்பிட்டுக் கொண்டு இருக்க முடியாது. ஆகவே தற்போது முழுமை திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டு அது செயல்படுத்தப்பட்டால் எந்த பிரச்சினையும் இனிமேல் ஏற்படாது. ரூபாய் 6000 என்பது எந்த பகுதி பாதிக்கப்பட்டாலும் வழங்கப்படும். அதை முழுமையாக இப்போது சொல்ல முடியாது.

No comments
Thank you for your comments