Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல்-மழை பாதிப்புகளை மத்திய அரசு குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  ஒன்றிய குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு.குணால் சத்யார்த்தி அவர்கள் தலைமையில், திரு.ரங்கநாத் ஆடம் மற்றும் திரு. திமான் சிங் ஆகியோர் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் மகாலட்சுமி நகர் பாலத்தில் அடையாறு ஆற்றின் உடைப்பு மற்றும் நீர்மட்டத்தை பார்வையிட்டு, இராயப்பா நகரில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். 

இதனை தொடர்ந்து அமரம்மேடு ஊராட்சியில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை  பார்வையிட்டு, செம்பரம்பாக்கம் ஏரியையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் திரு. ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன்  மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 

No comments

Thank you for your comments