காஞ்சிபுரத்தில் விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழா
அண்மையில் ஈரோட்டில் மருத்துவர்களுக்கான மாநில கூட்டமைப்பு சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இதில் இந்திய மருத்துவச் சங்கம் மாநில துணைத் தலைவர் பி.டி.சரவணன், காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன், செயலாளர் எஸ்.தன்யக்குமார்,கண் மருத்துவர் ஆர்.அனந்தலட்சுமி, பெண் மருத்துவர்கள் பிரிவின் தலைவர் எம்.நிஷாப்பிரியா ஆகியோர் சிறந்த மருத்துவர்கள் விருது பெற்றனர்.இவர்களுக்காக காஞ்சிபுரத்தில் தனியார் 5 நட்சத்திர உணவகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.பொருளாளர் ஞானகணேஷ்,இணைச் செயலாளர் வி.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுகாதாரப் பணிகள் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குநர் ஜி.சி.கோபிநாத் சிறந்த மருத்துவர் விருது பெற்ற மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக மக்களை நாடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் 7 பேருக்கும் இந்திய மருத்துவச் சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
பாராட்டு விழாவைத் தொடர்ந்து சிறுநீரகவியல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னையை சேர்ந்த மருத்துவர்களான என்.ராகவன்,சந்தீப் பாவ்னா ஆகியோர் பேசினார்கள்.சங்க செயலாளர் கே.எஸ்.தன்யக்குமார் நன்றி கூறினார்.


.jpg)
No comments
Thank you for your comments