கொல்கத்தாவில் தேசிய யோகாசனப் போட்டிகள் - வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து
காஞ்சிபுரம் :
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் அண்மையில் 67 வது தேசிய யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டிகளில் திருவாரூர்,கரூர்,காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் தமிழக அணியின் சார்பில் பங்கேற்றனர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி யுவஸ்ரீ தங்கப்பதக்கமும்,தர்ஷினி,மகேசுவரன், கண்ணன் உள்ளிட்ட 8 பேர் குழு அணி சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கமும் பெற்றிருந்தனர்.
குழுப் போட்டியில் தமிழக பெண்கள் அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வியை சந்தித்து வெற்றிக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்வின் போது உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், பள்ளிக்கல்வி உதவித் தட்ட அலுவலர் தனசேகர்,யோகா ஆசிரியர் யுவராஜ் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments