காஞ்சிபுரம் வரதராஜசுவாமி ரத்னஅங்கி சேவைக்காட்சி
காஞ்சிபுரம்,டிச.23:
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ஆண்டுக்கு இரு நாட்கள் மட்டும் உற்சவர் ரத்ன அங்கி சேவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.தாதாச்சாரியார் சாற்றுமுறை உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய இரு தினங்களில் மட்டுமே உற்சவரை ரத்ன அங்கி சேவையில் கண்டு தரிசிக்க முடியும்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜசுவாமி கோயில் மூலவர் கருவறையிலிருந்து இறங்கி வந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
திரளான பக்தர்கள் ரத்ன அங்கி அணிந்த உற்சவரை தரிசித்தனர். நண்பகல் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி பின்னர் திருக்கோயில் மாட வீதிகளில் பவனி வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

No comments
Thank you for your comments