Breaking News

மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை இன்று (23.12.2023) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கி பேசியதாவது:


காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் அரசு/அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின்  எண்ணிக்கை மொத்தம் 61. இதில் 2023-24 ஆம் கல்வியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு  பயிலும்  மாணவர்கள்  4038, மாணவியர்கள் 5181 என மொத்தம்  9219  மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

மொத்தம்  9219  மாணாக்கர்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த 2610 மாணவர்கள் மற்றும் 3325 மாணவிகள் மொத்தம் என 5935 மாணாக்கர்கள் ஆகும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் செலவினத் தொகை ரூ.2,86,16,000/- (ரூபாய் இரண்டு கோடியே எண்பத்தாறு இலட்சத்து பதினாறு ஆயிரம் மட்டும்) ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த 1415 மாணவர்கள் மற்றும் 1826 மாணவிகள் என மொத்தம் 3241 மாணாக்கர்கள் ஆகும். 

ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் செலவினத் தொகை ரூ.1,56,25,260/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரத்து இருநூற்று  அறுபது  மட்டும்) ஆகும்.


பிற இனத்தை (ஓ.சி) சார்ந்த 13 மாணவர்கள் மற்றும் 30 மாணவிகள் என மொத்தம் 43 மாணாக்கர்கள் ஆகும். பிற இனத்தை (ஓ.சி) சார்ந்த மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் செலவினத் தொகை ரூ.2,06,500/-(ரூபாய் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து ஐந்நூறு  மட்டும்) ஆகும். ஆக மொத்தம்  9219 மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் செலவினத் தொகை ரூ.4,44,47,760/- (ரூபாய் நான்கு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து எழுநூற்று அறுபது மட்டும்) ஆகும்.


இன்று திருப்பெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி-228 மாணவிகளுக்கும்,  திருப்பெரும்பதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி- 113 மாணவர்களுக்கும், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி –  125 மாணவ/ மாணவிகளுக்கும், மாத்தூர் TSK அரசு மேல்நிலைப்பள்ளி –  134 மாணவ/ மாணவிகளுக்கும்,  மொளச்சூர்  அரசு மேல்நிலைப் பள்ளி –  120 மாணவ/ மாணவிகளுக்கும், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி –  90 மாணவ/ மாணவிகளுக்கும்,  ஜமீன்தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி –  174 மாணவ/ மாணவிகளுக்கும், என மாணவர்களுக்கு 442 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 542 மிதிவண்டிகளும், ஆக மொத்தம் 984 மிதிவண்டிகள் வழங்கபடுகின்றன என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ. வெற்றிச்செல்வி,  திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், திருப்பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் திருமதி.சாந்தி சதீஷ்குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments