தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை கோவை வருகை யொட்டி அமைச்சர் ஆய்வு
கோவை நவ இந்தியா, சாலையில் அமைந்துள்ள, எஸ்.என்.ஆர் கல்லூரியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை மாநில அளவில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறைச்சாலை அருகில் அமைந்துள்ள அரசு பொருட்காட்சி மைதானத்தில் செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதையொட்டி, இன்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நிகழ்ச்சி நடைபெறவுள்ள கோவை அரசு பொருட்காட்சி திடலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர். நா.கார்த்திக்Ex.MLA., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொது சுகாதரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
.jpg)

No comments
Thank you for your comments