Breaking News

காஞ்சியில் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி ரூ.6000/- யை  மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்கள்.

இன்று (17.12.2023) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி ரூ.6000/-  மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கி பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி ரூ.6000/- வழங்கும் நிகழ்வு சென்னையில் துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 135 நியாய விலை கடைகள் மூலமாக 1,31,149 குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.78,68,94,000/- நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments