Breaking News

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் காந்தவயல் பகுதியில் நடைபெறும் பாலம் பணிகளை நேரில் ஆய்வு !


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை பேரூராட்சிகுட்பட்ட லிங்காபுரத்திலிருந்து காந்தவயல், காந்தையூர், ஆலூர், மேலூர், காந்தவயல் உலியூர் பகுதிகளுக்கு செல்ல பவானி ஆற்றின் இடையே 22 அடியில் ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

இப்பணிகள் குறித்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.இராசா  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகளிடையே பேசிய அவர் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அறிவுறுத்தினார். 

இந்நிகழ்ச்சியில்  கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணை தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், நகர பொருளாளர் ரங்கராஜ், காரமடை ஒன்றிய செயலாளர்கள் சு.சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹக்கீம், காரமடை துணை நகர செயலாளர் நாக நந்தினி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் கணேஷ் மூர்த்தி, அமைப்பாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, பேரூர், நகர கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments