டிடி மோட்டூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் கபடி போட்டி
வேலூர்,டிச.12-
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா டிடி மோட்டூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பகல் இரவு கபடி போட்டி அம்மன் பிரதர்ஸ் அணியினர் சார்பில் நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அமிலா யுவராஜ் தலைமை தாங்கினார். ஊர் நாட்டாமை பிரேம்குமார், ஊர் தர்மகத்தா காசி முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் 40 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை அமச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் துவக்கி வைத்தார். முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு 15 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் கோப்பை, நான்காம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் கோப்பை, ஆறுதல் பரிசாக தலா 2000 வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்ச்செல்வன் மணி சீருடை வழங்கினார். போட்டியை நித்திஷ் குமார், சரண்ராஜ், இளவரசன், சஞ்சய் அப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments