ஜே ஜே நகர் பகுதியில் பகுதி சபா கூட்டம்
வேலூர், டிச.12-
வேலூர் மாநகராட்சி மண்டலத்திற்கு உள்பட்ட 1-வது வார்டில் சத்திரம் தெரு, நேரு தெரு, பாரதியார் தெரு, ஜே ஜே நகர் பகுதியில் உள்ளவர்களை அழைத்து பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் கே.அன்பு தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் பகுதியில் கோரிக்கைகள் செய்து தர வேண்டும் என முன் வைத்தனர். அதில் பாரதியார் தெரு மற்றும் சத்திரம் தெரு பகுதிகளில் சாலை வசதி தேவை என்றும், மேலும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments