Breaking News

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்டங்களை வழங்கல்

கழக இளைஞரணி செயலாளர்-  விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் திருமதி.சுமதி ஜீவானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மாநகர கழக செயலாளர் திரு.சி.கே.வி.தமிழ்செல்வன் அவர்களின் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திரு.தேவராசன்,திரு.நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவினையும் தூய்மை பணியாளர்களுக்கு அரசி காய்கறிகள் உள்ளிட்ட நலதிட்டங்களையும் மக்கள் பிரதிநிதிகளான காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி‌.எம்.பி.எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ்,மண்டல குழு தலைவர் திருமதி.சசிகலா கணேஷ் ஆகியோர் வழங்கினர்.




இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அ.யுவராஜ்,மாநகர அவைத்தலைவர் திரு.கே.ஏ.செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள் திரு.ஏ.எஸ்.முத்துசெல்வன், திரு.வ.ஜெகன்நாதன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி‌.செல்வி,மாநகர பிரதிநிதிகள் திரு‌.எஸ்.மாமல்லன் திரு.சுகுமாரன், திரு.எஸ்.வி.பிரகாஷ், 10வது வட்ட கழக செயலாளர் திரு.ரவி,வட்ட கழகத்தை சார்ந்த திரு.முகுந்தன், ராஜ்,மகளிரணியினர் திருமதி.தனலட்சுமி, திருமதி.தேவிகா,திருமதி.கீதா மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments