Breaking News

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பங்காற்றியவர்களுக்கு பரிசு தொகையுடன் விருது - உடனே விண்ணப்பிக்கலாம்

 பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் பெண் குழந்தைகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது.



இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளதாவது, 

தமிழ்நாடு சமூக நலத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

மேற்படி, விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

மேற்காணும் விருதினை பெற குழந்தையின் பெயர், தாய்/தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன்மொழிவுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, 16.12.2023 முதல் 31.12.2023 வரை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பதாரர்கள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

click here 👉  Awards_Notification.pdf

No comments

Thank you for your comments