Breaking News

இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை நடைபெறுகிறது..

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை  நடைபெறுகிறது.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது:-

இந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி, சென்னை ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தால் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில், பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே. இப்பேரணி நிகழ்ச்சியில் அதிக அளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையவும், இதில் ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்தோ பயன் பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments