Breaking News

கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் கருத்தரங்கும் !!

கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் (சிசிஐ) அதன் வருடாந்திர பருத்தி தினத்தை இந்த வாரம் நடத்தியது, இதில் அமெரிக்க பருத்தியை பயன்படுத்தி இந்திய ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தரங்கும் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சர்வதேச பருத்தில் கவுன்சில் சார்பில் அதன் பிரதிநிதி பியூஷ் நரங் பேசுகையில், உலகளாவிய பருத்தி நுகர்வில் இந்தியாவின் முக்கிய பங்கு, உலகளாவிய மற்றும் இந்திய ஜவுளித் துறைகளில் அமெரிக்க பருத்தியின் போக்கு பற்றிய விரிவாக எடுத்துக் கூறினார்.

இக்கருத்தரங்கில் பேசிய தெற்காசியாவிற்கான சிசிஐ இயக்குனர் வில் பெட்டன்டோர்ப் கூறுகையில், இந்தியாவின் முக்கியத் துறையான ஜவளித் துறையில் அமெரிக்க பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது ,இந்திய ஜவுளி ஆலைகளின் சாதுர்யமிக்க செயல்பாடுகளுடன் இணைந்து இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி சந்தைகளுக்கு ஒரு சிறந்த, நிலையான மற்றும் உயர்தர உற்பத்தியை அளிக்கிறது என்று தெரிவித்தார், சுபிமா தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் லெவ்கோவிட்ஸ் பேசுகையில் நார் பொருட்கள் உற்பத்தியில் அமெரிக்க தொழில்துறை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது ,மேலும் அவர் சுபிமாவின் திட்டத்தையும் அறிமுகம் செய்தார் ,மேலும் இதுபோன்ற நேரடி சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை தொடர்ந்து வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்தார் .

No comments

Thank you for your comments