Breaking News

உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா

 கோவை மாவட்டம் உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் 10ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் என்.ஜி.பி கலையரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி,  இவ்விழாவிற்குத் தலைமையேற்று தமிழ்மொழியின் சிறப்பைப் பாதுகாக்க தன்னால் இயன்றதை நிச்சயமாகச் செய்ய வேண்டுமென்று தான் உறுதி பூண்டதாகத் தமது உரையில் கூறினார். மேலும் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி விருது பெறுகின்ற படைப்பாளர்களுக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.விருது பெறுபவர்கள் பற்றிய அறிமுகவுரையை பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் வழங்கினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி சிற்பியின் பாரதி கைதி எண் 253 என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை நூலை வெளியிட்டார். இவ்விழாவில் முனைவர் ப.மருதநாயகம் தமிழ் சிறப்புக் குறித்தும் சிற்பியின் பாரதி கைதி எண் 253° என்ற நூலின் சிறப்புப் பற்றியும் உரையாற்றினார். உ.வே.சா.தமிழறிஞர் விருது முனைவர்பா.ரா.சுப்ரமணியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகள் முனைவர் சு.சண்முகசுந்தரம், முனைவர் ஆ.மணி, எழுத்தாளர் க.அம்சப்ரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முனைவர் பா.ரா.சுப்ரமணியம் எழுத்தாளர் நாடன், முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி விருது பெற்று மகிழ்வுரை வழங்கினார்கள்,எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

No comments

Thank you for your comments