காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் ரௌடி கொலை... எஸ்.பி.விசாரணை
காஞ்சிபுரம், டிச.26:
![]() |
| பிரபாகரன் |
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அருகே புதுப்பாளையம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சுகுமாறன் மகன் பிரபா என்ற பிரபாகரன்(30)இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பல்லவர் மேடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 3 பேர் அவரை பட்டாக்கத்தியால் வெட்டி விட்டு அதே காரில் தப்பி தலைமறைவாகி விட்டனர்.பட்டப் பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.பிரபாகரன் உடல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணாக கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments