அகத்தியா பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது
இவ்விழாவை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழர் மரபுகள் சங்கமத்தைச் சேர்ந்த ரேகா சிவக்குமார், வாழி பேரரசன் ஆகியோரும் ஊத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி மணிகண்டன், சிறுதானிய தொழில் முனைவர் அ.நிர்மல்குமார் மாநில ஊரக வளர்ச்சித் துறை பயிற்சியாளர் அரவிந்தன் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்
இத் திருவிழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் சிறு தானிய திணை வகைகளில் உருவாக்கப்பட்ட திண்பண்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் கருப்பு கவுணி , கிச்சிலி சம்பா, வரகு அரிசி, இரத்த சாலி அரிசி போன்ற பாரம்பரிய வகைகளில் தயாரிக்கப்பட்ட ருசியான பல்வேறு உணவு வகைகள் முடவாட்டு கிழங்கு போன்ற ஏராளமான மூலிகை பொருட்கள் மற்றும் மீட்கப்பட்ட 60 வகையான பாரம்பரிய அரிசி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் திருவிழா போல பெற்றோர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று கண்டு களித்தனர்
.jpg)

No comments
Thank you for your comments