எம்.ஜி.ஆரின் 36வது ஆண்டு நினைவுநாள் - திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை... அன்னதானம் வழங்கல்
காஞ்சிபுரம் :
- காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து எம்.ஜி.ஆரின் 36வது ஆண்டு நினைவுநாள் மாவட்டச் செயலாளர் ஆர்வி ரஞ்சித் குமார் அனுசரிப்பு
- பொதுமக்களுக்கும்,கட்சித்தொண்டர்களுக்கும் சுடச் சுட ஆவி பறக்க வெஜிடபுள் பிரியாணி வழங்கிய அதிமுக ஓ.பி.எஸ் அணியினர்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது.
அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கற்பூர தீபாராதனை காண்பித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு ஏராளமான பொதுமக்களுக்கும்,கட்சி தொண்டர்களுக்கும் வெங்காய பச்சடி,கொஸ்துடன் சுடச் சுட ஆவி பறக்க வெஜிடபுள் பிரியாணியை அன்னதானமாக வழங்கினர்.
சுடச் சுட ஆவி பறக்க அதிமுக ஓ.பி.எஸ் அணியினர் வழங்கிய வெஜிடபுள் பிரியாணையை பொதுமக்கள் ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ரங்கநாதன் பொருளாளர் வஜ்ரவேலு துணைச் செயலாளர் சகுந்தலா கோபால் காஞ்சிபுரம் நகர செயலாளர் பழனி முரளி ஒன்றிய செயலாளர் முனிரத்தினம் கோவிந்தராஜ் அருண் சசி வாலாஜாபாத் பேரூராட்சி ஆர் ஜெயகாந்தன் ஏ நிக்சன் அம்மு ராஜ் உத்திரமேரூர் பேரூராட்சி குலசேகரன் கழக நிர்வாகிகள் படப்பை பாபு அன்பு தாந்தோணி பூசிவாக்கம் செல்வம் சந்திரசேகர் விஜயன் ஏகாம்பரம் ரமேஷ் ஷகிலா மாவட்ட அணி செயலாளர் ராஜ்குமார் எத்தேந்திரன் பூக்கடை ஜகா உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


No comments
Thank you for your comments