Breaking News

மின்சாரம் சேமிப்பு வைத்தல் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், மின் பகிர்மான வட்டம் சார்பில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து  நிலையத்தில்,  மின்சாரம் சேமிப்பு வைத்தல் தொடர்பான விழிப்புணர்வு  வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.





காஞ்சிபுரம் மாவட்டம், மின் பகிர்மான வட்டம் சார்பில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து  நிலையத்தில், இன்று (16.12.2023) மின்சாரம் சேமிப்பு வைத்தல் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், காஞ்சிபுரம்  மின் பகிர்மான வட்டம்  சார்பில், (Go Electric Campaign) மின் வாகனம் (E-Vehicle) பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை (Road show) காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, மின்வாகன உபயோகத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும்  பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும் பிரச்சார வாகனம்   காஞ்சிபுரம்   சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் செல்ல இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், தலைமை பொறியாளர் பொறிஞர்.சந்திரசேகரன், காஞ்சிபுரம் மண்டலம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் பொறிஞர்.S.சுனில் குமார்,  மின்பகிர்மான பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments