Breaking News

கலெக்டர் தலைமையில் 138 டாஸ்மாக் பார்களுக்கு ஏலம் நடைபெற்றது

 கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களுக்கு நீண்ட நாட்களாக ஏலம் விடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று டெண்டர் விடும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 


கோவை வடக்கு பகுதியில் உள்ள 77 பார்களுக்கு 146 நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கோவை தெற்கு பகுதி பார்களுக்கு 123 நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 

டெண்டர் பணிகள் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள், டெண்டர்க்கு விண்ணப்பித்தவர்கள் உள்பட 250- க்கும் மேலானவர்கள் கலந்துகொண்டனர். 

இதில் கோவை தெற்கு மற்றும் வடக்கில் 138 பார்களுக்காக கூடுதல் தொகை நிர்ணயித்த 138 நபர்களுக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments